(charge sheet filed case called open court due presence accused woman)
யாழ்ப்பாணம் நீதித்துறையில் முதன்முறையாக மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கோப்பாய் பொலிஸார் குற்றப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போதும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் முன்னிலையாகாத காரணத்தால், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
யாழ். இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் மதுபோதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறினர்.
அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண், பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த பெண் மீண்டும் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
(charge sheet filed case called open court due presence accused woman)
More Tamil News
- எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க
- அரச வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்; நோயாளர்கள் சிரமம்
- எரிபொருள் விநியோகத்தில் மோசடி; ஒரு கோடி ரூபா நஷ்டம்
- 9 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்; 49 வயது நபர் கைது
- கோட்டபாயவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது; ஜேவிபி
- யாழில் 275 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு
- ஒரே வேடத்தில் இரு ஆண்களை திருமணம் முடித்த பெண்; இலங்கையில் சம்பவம்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்