பேஸ்புக்கில் அறிமுகமான இளம் பெண்களுக்கு நபரொருவர் செய்து வந்த காரியம்

0
1421
Canada Man Girls Facebook

Canada Man Girls Facebook

பராயமடையாத இளம் பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த கனடாவின், பிரன்ஸ்விக்கின் சென். ஜோன்ஸைச் சேர்ந்த 33 வயது இளைஞனொருவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கு கீழ்பட்ட இளம் பெண் பிள்ளைகளை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மூலமாகவே அவர் பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இக்குற்றச்சம்பவங்கள், 2014 – 2016 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் பெண்களை இணங்க வைத்தோ, கட்டாயப்படுத்தியோ உறவுகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சில வேளைகளில் தன்னை வயது குறைந்தவராக அடையாளப்படுத்தி இக்குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.