போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

0
318
Accident bus driver tragedy walking girl

Accident bus driver tragedy walking girl

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு எழுபதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது, அப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் விஜய் மதுபோதையில் இருந்துள்ளார், பேருந்து புறப்பட்ட முதலே ஓட்டுநர் விஜய் மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டிவந்ததாக தெரிகிறது, பல்லடம் சாலையில் பேருந்து அதிவேகமாக சென்றபோது சாலையோரம் நடந்து சென்ற அங்கம்மாள் என்பவர் மீது மோதியது,

இந்த விபத்தில் அங்கம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுநர் விஜய்யை அடித்து உதைத்தனர், அத்துடன் பலத்த காயமடைந்த அங்கம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

பின்னர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மது அருந்திவிட்டு பேருந்தை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் விஜய்யை கைது செய்தனர்.

More Tamil News

Tamil News Group websites :