நூதனமாக விலையுயர்ந்த மின்கலங்களை திருடி விற்ற மூவர் கைது

0
662
Three arrested stolen Signal Towers Batteries

(Three arrested stolen Signal Towers Batteries)
கையடக்கத் தொலைப்பேசி சமிஞ்ஞை கோபுரங்களிலுள்ள (Signal Towers) விலையுயர்ந்த மின்கலங்களை (Batteries) இரவு நேரத்தில் திருடி விற்ற சந்தேகத்தின் பேரில், ஒழுங்மைக்கப்பட்ட கும்பல் ஒன்றின் தலைவர் மற்றும் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சிக்கடைப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த மூவரும் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ, கொச்சிகடை, சீதுவ மற்றும் மடம்பெல்ல பிரதேசத்திலுள்ள தொலைப்பேசி சமிஞ்ஞை அமைப்புகளின் கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மற்றும் பிரதான மின்சாரம் துண்டிக்கப்படும் போது மின்சாரம் வழங்க பொருத்தப்பட்டிருந்த மின்கலன்களை திருடி ஜாஎல, ஏக்கல பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்தனர்.

இதுகுறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் உயர் மின்னழுத்தமுடைய 32 மின்கலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மின்கலங்கள் 40 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் டெலிகொம், டயலொக் கையடக்க தொலைபேசி சமிஞ்ஞை தொகுப்பு கோபுரங்களின் கீழ் பகுதியில், பாதுகாப்பாக இந்த மின்கலன்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், எவரும் சந்தேகிக்காத வகையில் சேவை வழங்கச் சென்ற குழுவினர் போன்று செயற்பட்டு இந்த மின்கலங்களை கழற்றியுள்ளனர்.

பிரதான மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் இந்த மின்கலங்கள் ஊடாக மின்சாரம் பெற்று சமிஞ்ஞைகள் கிடைப்பதாகவும் சூரிய சக்தி மின் அமைப்புக்கு (Solar panels power system) இந்த மின்கலங்கள் பொருத்தக்கூடியவை எனவும், அதனால் இலகுவாக விற்பனை செய்த பணத்தைக் கொண்டு போதைப் பொருள் கொள்வனவு செய்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Three arrested stolen Signal Towers Batteries