(Worm Government Office Restaurant Food)
பத்தரமுல்ல – செத்சிறிபாய அரசாங்க அலுவலக வளாகத்திலுள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சமைத்த உணவில் புழுவொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த உணவகத்தை ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டை நகர சபையின் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பத்தரமுல்ல, செத்சிறிபாய அரசாங்க அலுவலக வளாகத்தில் மூன்று உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்கள் அசுத்தமாக இருப்பதாக இங்குள்ள அலுவலக சேவையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த அலுவலக வளாகத்தில் அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பல அலுவலகங்கள் அமைந்துள்ளது.
இவைகளில் சேவை செய்வோர் மற்றும் இங்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்களும் இந்த உணவகங்களில் இருந்து உணவை கொள்வனவு செய்கின்றனர்.
இந்த உணவகங்களில் பரிமாறப்படும் உணவு சுத்தமற்றதாகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும் பரிமாறப்படும் உணவுகளுக்கு அவர்களின் இஷ்டப்படி பணம் அறவிடப்படுவதாகவும் இங்குள்ள அலுவலக சேவையாளர்கள் கூறுகின்றனர்.
More Tamil News
- இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை
- நல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி
- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு
- இனப் படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி
- மீனவர்களுக்கு நற்செய்தி; அமைச்சரவையில் முடிவு
- செயலாளர் பதவியை இராஜினமா செய்யவுள்ளார் மஹிந்த அமரவீர
- ஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் கோட்டபாயவே
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Worm Government Office Restaurant Food