சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

0
640
Vijay suprise gifted Santhosh Narayanan,Vijay suprise gifted Santhosh,Vijay suprise gifted,Vijay suprise,Vijay

(Vijay suprise gifted Santhosh Narayanan)

“அட்டக்கத்தி” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு, தளபதி விஜய் சிறப்பு பரிசளித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

பா.இரஞ்சித் இயக்கிய “அட்டக்கத்தி” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ”சூது கவ்வும்”, ”குக்கூ”, ”ஜிகர்தண்டா”, ”மெட்ராஸ்”, ”கபாலி” ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.

அதன் பின்னர் விஜய் நடித்த ”பைரவா” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் ”வரலாம் வரலாம் வா…”, ”நில்லாயோ…”, ”பாப்பா” ஆகிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.

அதுமட்டுமல்லாமல், தற்போது ”காலா”, ”பரியேறும் பெருமாள்” உள்ளிட்ட படங்களுக்கும் இவர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

முக்கியமாக, நடிகர் விஜய், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

மேலும், சந்தோஷ் நாராயணுக்காக பிரத்யேகமாக ஒரு பேட் ஒன்றை உருவாக்கி அதில், ”SaNa Happy Birthday Nanba” என்று பதிவு செய்து அன்புடன் விஜய் என்று கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்.

”இந்த பரிசு என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும், சிறப்பு பரிசு அளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி” என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Tags :-Vijay suprise gifted Santhosh Narayanan

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.