ஏழை விவசாயி பரிதாபமாக பலி : நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்

0
965
vavuniya thandikulam accident one killed

(vavuniya thandikulam accident one killed)
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

வவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்ற போதே யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனமொன்று பின்புறமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக துவிச்சக்கர வண்டியில் சென்ற ஓமந்தை சின்னக்குளத்தை சேர்ந்த 50 வயதுடைய ராசன் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியதுடன் அவரது சடலம் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந் நிலையில் வாகனத்தின் சாரதியை கைது செய்த வவுனியா பொலிஸார் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.​

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :