பஸ் கட்டணம் அதிகரிப்பு, சேவைப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

0
519
Transport Commission announced revised bus fares today

(Transport Commission announced revised bus fares today)

நாடளாவிய ரீதியாக இன்று நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.

20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியிருந்தது.

இந்தநிலையில் 12.5% சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளை அடுத்தே போராட்டத்தை கைவிடப்போவதாக தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 6.56% சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிக்காமல் இருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னர் ஆரம்ப கட்டணங்களில் மாற்றம்..

Previous Fare (Rs.) New Fare (Rs.)
10 10
13 14
17 18
21 23
25 27
29 31
34 36
(Transport Commission announced revised bus fares today)

More Tamil News

Tamil News Group websites :