‘மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” : பலநாள் நூதன திருடன் சிக்கினான்

0
1404
Thief arrested gampola use snakes

(Thief arrested gampola use snakes )
கொடிய விசமுடைய பாம்புகளை பிடித்து அவற்றைத் தாக்கி குற்றுயிராக்கி பின்னர் மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில் போட்டு, நூதன கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கம்பளையில் பதிவாகியுள்ளது.

“மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” எனக் கூறி பெண்களை பீதியடையச் செய்து நகைகளை இவர் கொள்ளையிட்டு வந்துள்ளார்.

குடு நுவான் எனப்படும் நுவான் குமார என்பவரே, இவ்வாறு நீண்டகாலமாக கம்பளை பிரதேசத்தில் நூதனமாக பெண்களிடம் கொள்ளையடித்து வந்துள்ளார்.

கைது செய்த நபரை கம்பளை நீதவான் நீதிமன்ற நீதவான் நிலன்த பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாம்புகளைப் பிடித்து மக்கள் இருக்கும் இடங்களில் போட்டு, பாம்புப் பீதியைக் காண்பித்து இவர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக குறித்த நபருக்கு ஏற்கனவே சில பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை கல்கெடியாவ பிரதேசத்தில் நூலகம் ஒன்றிற்குள் பாம்பு ஒன்றை போட்டு, அங்கிருந்த பெண்களிடமிருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட இந்த நபர் முயற்சித்துள்ளார்.

பாம்பைக் கண்டதும் பெண்கள் கூச்சலிட்ட காரணத்தினால் அருகாiமையில் இருந்தவர்கள் அங்கு கூடிய போது, அருகாமையில் உள்ள கடையொன்றில் 8000 ரூபா பணத்தை குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.

அண்மையில் கடவத்தை பிரதேசத்தில் பழக்கடையொன்றுக்கு சென்று பாம்பு ஒன்றைப் போட்டு அங்கிருந்த பெண்ணிடம் நகையை கொள்ளையிட முயற்சித்த போது, அருகாமையில் இருந்தவர்கள் கூடி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :