Teacher Shot Dead USA
பெற்றோருக்கு அடுத்த படியானது ஆசியர். அவர்கள் நமது வாழ்வில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம்.
பென்சில்வேனியாவில், ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரச்செல் டெல்டொன்டோ, என்ற 32 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அன்னையர் தினத்தன்று நண்பியுடன் காரில் ஐஸ் கிரீம் வாங்கச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
காரில் இருந்து கீழே இறங்கியபோது அங்கு வந்த துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளார்.
அவர் சுமார் 10- 12 தடவை சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியையாக இருந்த அவர் மாணவனொருவனுடன் தொடர்பைப் பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் காருக்குள் மாணவனுடன் உறவு கொண்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்கொலையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.