புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

0
563
tamillnews kilinochi people protest liqueur bar open

(tamillnews kilinochi people protest liqueur bar open)

கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் பிரதேச மக்களால் இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் கூடிய மக்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கு சென்ற மக்கள் அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதேச சபை தவிசாளரிடம் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜரை வழங்கினர்.

இதன்போது பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து பிரதேச மக்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்று அங்கு அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள் குறிப்பிடுகையில்,

எமது பிரதேசத்தில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றை திறப்பதற்கு பல முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தவிடயம் தொடர்பில் பல்வேறு போராட்டங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் அது தொடர்ந்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்படும் பகுதியை அண்மித்து பாடசாலை காணப்படுவதுடன், அப்பகுதியில் ஏற்கனவு பெண்களிற்கான பாதுகாப்பு இல்லாது உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அங்கு ஏற்கனவே கஞ்சா மற்றும் கசிப்புக்களை அருந்திவிட்டு அவ்வீதியில் பெண்கள் பயணிக்க முடியாதவாறு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும். அண்மையில் முதியவர் ஒருவர் விழுத்தப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டு சென்ற சம்பவமும் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் எமது பிரதேசத்தில் அமைக்கப்படும் விற்பனை நிலையத்தினால் எமது பிள்ளைகள், பெண்கள் பாதுகாப்பின்றி வாழ்வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மக்கள் இதன்புாது கரு்தது தெரிவித்தனர்.

(tamillnews kilinochi people protest liqueur bar open)

More Tamil News

Tamil News Group websites :