திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி

0
1686
Suddenly fire Three Wheeler Gampola Nawalapitiya Main Street

(Suddenly fire Three Wheeler Gampola Nawalapitiya Main Street)
கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடித்த நிலையில், ஓட்டுநரும், பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் அனைவரும் எந்தவித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

இந்த முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தீயை பிரதேசவாசிகள் இணைந்து அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Suddenly fire Three Wheeler Gampola Nawalapitiya Main Street