சவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி; போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!

0
567
Saudi Military combat training Saudi Tamil news

(Saudi Military combat training Saudi Tamil news)

ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது.

ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி ராணுவமும், ஐக்கிய அரபு அமீரகம் ராணுவமும் செயல்பட்டு வருகிறது

இதில் முக்கியமாக ஐக்கிய அரபு அமீரக ராணுவம் பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் சவுதி ராணுவ படைகள் ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் தனது படையை களமிறக்கி உள்ளது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரக படையும், ஏமன் படையும் அங்கே களமிறங்கி இருக்கிறது. மூன்று நாட்டு படைகளும் ஒன்றாக சேர்ந்து, அந்த தீவில் பயிற்சி எடுக்க இருக்கிறார்கள்.

புரட்சி படைக்களுக்கு எதிராக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த கூட்டு பயிற்சி காரணமாக அங்கு பெரிய பதட்டம் நிலவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தையும், ஏமனையும் இணைக்கும் கடல் வழி பகுதியில்தான் இந்த தீவு உள்ளது.இதனால் அங்கே மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.

மூன்று நாட்டு படைகளுக்கும் எதிராக மக்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதே தீவில் இதுவரை புரட்சி படை ஒன்று கூட இல்லாத போது, ஏன் இந்த திடீர் கூட்டு பயிற்சி என்று மக்கள் கோபமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

(Saudi Military combat training Saudi Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :