சிங்கப்பூர்க் குழுவை வழிநடத்த ஃபாண்டி அகமது இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம்

0
158
Phanti Ahmad appointed Interim Leading Instructor

(Phanti Ahmad appointed Interim Leading Instructor)

ஆசியான் காற்பந்துச் சம்மேளனத்தின் சுஸுக்கி கிண்ணப் போட்டியில் சிங்கப்பூரின் தேசியக் குழுவை வழிநடத்த, சிங்கப்பூர்க் காற்பந்து நட்சத்திரமான ஃபாண்டி அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Great Eastern-Hyundai சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் Young Lions குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி அகமது தொடர்ந்து நீடிப்பார்.

அத்துடன்,  அடுத்த ஆண்டின் தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கும், 2020 ஆசியக் காற்பந்துச் சம்மேளனத்தின் 23 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்குரிய போட்டிக்கும் அவர், தொடர்ந்து சிங்கப்பூர்க் குழுவுக்குப் பயிற்சியளிப்பார்.

மேலும் , சுஸுக்கி கிண்ணம் முடிவடைந்த பின் தேசியக் குழுவின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளருடன் ஃபாண்டி ஒன்றிணைந்து பணியாற்றி குழுவின் திறமையை மேம்படுத்துவார்.

அதுமட்டுமில்லாமல், இளையர் நிலையிலிருந்து குழுவை வளர்க்கும் நோக்கில், புதிதாக நியமிக்கப்படும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் செயல்படவேண்டும்.

மற்றும் , அவசரப்பட்டு அடுத்த பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று சங்கத் தலைவர் லிம் கியா தோங் கூறினார்.

tags:-Phanti Ahmad appointed Interim Leading Instructor

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**