கூட்டுப்பாதுகாப்பு முயற்சியின் வெற்றியாளர் பிரான்ஸ்!

0
554
NATO group Secretary visit Fran

NATO செயலாளர் நாயகம் ஸ்டொல்டென்பெக் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  NATO group Secretary visit France
பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலைஸ் மாளிகையில் இந்த உத்தியோக பூர்வ சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

NATO பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் ஸ்டொல்டென்பெர்க் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் சிறப்பான வரவேற்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நட்டோ பிரஸ்ஸல்ஸ் (NATO Brussels) பேச்சுக்களுக்கு முன்னதாக ஸ்டொல்டென்பெர்க் பிரான்ஸுக்கு இரண்டு நாள் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் அதிகாரிகள் சைபர் பாதுகாப்பு உறுதிமொழி மாநாடு ஒன்றிற்காக அவரை அழைத்ததன் பேரிலேயே அவர் இந்த விஜயத்தினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரான்ஸ் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநாட்டில் நேற்று, கூட்டுப்பாதுகாப்பு மற்றும் பன்முகப் படுத்தப்பட்ட தன்மை போன்றவற்றில் பிரான்ஸ்தான் வெற்றியாளர் என ஸ்டொல்டென்பெர்க் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**