நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!

0
500
Naked brazen prisoner screamed shirt court

Naked brazen prisoner screamed shirt court

கோவை நீதிமன்றத்தில் மத்தியசிறை கைதி சட்டையை கழற்றி, தனக்கு சிறையில் கொடுமை நடப்பதாக கதறினார்,

கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் சஞ்சை ராஜா (26), இவர் கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2017’ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இதுதவிர சில அடிதடி வழக்குகளும் இவர் மீது உள்ளன, அவ்வாறான ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சஞ்சை ஆஜர்படுத்தப்பட்டார், பின்னர் மீண்டும் சஞ்சையை சிறைக்கு அழைத்து சென்றபோது நீதிமன்ற வளாகத்திலேயே சட்டையை கழற்றி ‘என்னை ஜெயில்ல கொடுமை செய்றாங்க’ ‘இந்த கொடுமையை யாராச்சும் கேளுங்க’ ‘முன்பகைய மனசுல வச்சிகிட்டு சிறை அதிகாரி என்ன காட்டுத்தனமா அடிக்குறாரு’ என்று கதறினார்,

மேலும் தர்ணாவில் ஈடுபட முயன்றார், அவரை காவல்துறையினர் தடுத்து அழைத்து சென்றனர், மேலும் குறிப்பாக சிறைக் காவல் கண்காணிப்பாளர் என் மீதுள்ள கோபத்தில் தனிமை சிறையில் என்னை அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார், காயங்களால் அவதிப்படும் தனக்கு மருத்துவ வசதி வேண்டுமென்றும், சிறை மாற்றம் செய்ய வேண்டுமென்றும், முழக்கமிட்டுக்கொண்டே சென்றார்,

கோவை மத்தியசிறை மட்டுமில்லாமல் தமிழகத்திலுள்ள பல சிறைகளில் கைதிகள் தற்கொலை மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் காவல் கண்காணிப்பாளர் மீது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது…..

More Tamil News

Tamil News Group websites :