வாழ்வா? சாவா? போட்டியில் மோதும் மும்பை – பஞ்சாப் அணிகள்!

0
393
Mumbai Indians vs kings IX Punjab 2018

(Mumbai Indians vs kings IX Punjab 2018)

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்று மும்பை இந்தியன்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்றைய போட்டியானது இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமாயின் மும்ப அணி இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன், அடுத்து நடைபெறவுள்ள டெல்லி அணிக்கெதிரான போட்டியிலும் வெற்றிபெற வேண்டும்.

ஆனால் இன்றைய போட்டியில் மும்பை அணி தோல்வியுறும் பட்சத்தில் தொடரிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதேவேளை பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி இந்தூரில் வைத்து வீழ்த்தியது.

இந்நிலையில் தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது.

அணிவிபரங்களை பொருத்தவரையில் மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக கிரின் பொல்லாரட் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பஞ்சாப் அணியில் உபாதைக்குள்ளாகியிருந்த முஜிபூர் ரஹ்மான் மீண்டும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>