ரெய்னா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டோனி மற்றும் பிராவோ…

0
590
MS Dhoni Dwayne Bravo Celebrate Suresh Raina Daughter Birthday

(MS Dhoni Dwayne Bravo Celebrate Suresh Raina Daughter Birthday)

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னாவின் மகள் கிரேஷியாவின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

சுரேஷ் ரெய்னாவின் மகள் கிரேஷியா இன்று புதன்கிழமை தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள ஹோட்டலொன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டோனி, பிராவோ வருகைத்தந்ததுடன், பிறந்த நாள் பாடலையும் பாடியுள்ளனர்.

அதுமாத்திரமின்றி பிராவோ பாடல் பாடி அசத்தியதுடன், குழந்தைகளுடன் நடனமும் ஆடியுள்ளார்.

குறித்த வீடியோக்கம் மற்றும் புகைப்படங்களை சென்னை சுப்பர் கிங்ஸ் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் வெளியிட்டுள்ளது.

இரண்டு வருட தடைக்கு பின்னர் போட்டிகளுக்கு திரும்பியுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<Tamil News Group websites>>