பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்குகிறது கொல்கத்தா!

0
515
kolkata knight riders beat Rajasthan Royals

(kolkata knight riders beat Rajasthan Royals)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் கட்டாய வெற்றியினை நோக்கி களமிறங்கிய இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ஆரம்பத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ராஹுல் டிருப்பாதி 15 பந்துகளுக்கு 27 ஓட்டங்களையும், பட்லர் 22 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ராஜஸ்தான் அணி 4.5 ஓவர்கள் நிறைவில் 63 ஓட்டங்களை குவித்தது.

எனினும் கொல்கத்தா அணி சார்பில் பந்து வீசிய குல்டீப் யாதவ், 4 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்ற, ராஜஸ்தான் 142 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கொல்கத்தா அணிசார்பில் கிரிஸ் லின் 45 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமக பெற்றுக்கொடுத்தனர்.

இந்த போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பிளே-ஆஃப் சுற்றுக்கு எஞ்சியுள்ள ஒரு போட்டியில் வெற்றிபெறவேண்டும்.

<<Tamil News Group websites>>