கண்டி கலவரம் : திலும் அமுனுகமவின் கைத், தொலைபேசியை கைப்பற்றி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்

0
1557
kandy riots dilum amunugama mobile

(kandy riots dilum amunugama mobile)
பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி விசாரணைகள் முடிந்து இரவு 11.30 மணியளவில் அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக தனது கையடக்க தொலைபேசியை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் நேற்று அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/15/tamilnews-complaint-mysteriously-lost-child-found-buried-untimely/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :