ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரருக்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து!

0
579
Jos buttler named England test squad vs Pakistan

(Jos buttler named England test squad vs Pakistan)

இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் திடீரென இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர். தற்போது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி தொடர்ந்து அரைச்சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

அதிலும் இரண்டு இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காமல் 95 மற்றும் 94 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக பதவியேற்ற எட்.ஸ்மித் ஜோஸ் பட்லரை அணியில் இணைத்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கு பின்னர் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் இணைக்கப்படவில்லை. எனினும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 குழாமில் முக்கிய வீரராக விளையாடிவந்தார். அதுவும் இருபதுக்கு-20 போட்டிகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய வல்லமை பொருந்தியவர்.

இவ்வாறு அதிரடியாக துடுப்பெடுத்தாடக் கூடிய வீரரை அணியில் இணைத்தமை புதிய தேர்வுக்குழு தலைவரின் எதிர்பாராததும், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதுமான தீர்மானமென கிரிக்கெட் ஆர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் ஜோஸ் பட்லர் 5 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 548 ஓட்டங்களை குவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>