(Four year old boy Occurred Feisty)
ஜாதகத்தின்படி நான்காம் எண் ராசியில்லை எனக் கருதி தாயொருவர் பிலியந்தலை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் நான்கு வயது சிறுவனை துறவியாக்குவதற்காக ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன், இரவு முழுவதும் தனது தாயை தேடி அழுதுகொண்டிருந்த போது, பிலியந்தலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
சிறு குழந்தையொன்றின் அழுகுரல் இரவு முழுவதும் பௌத்த விகாரையில் இருந்து கேட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த சிறுவனை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொலிஸார் விகாரையின் விகாராதிபதியிடம் வினவியபோது, சிறுவனின் தாயும் இன்னொரு நபரும் குறித்த சிறுவனை துறவியாக்கும்படி தன்னிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் சிறுவனின் தாயுடன் தொடர்புகொள்ள முடியாமல் போன நிலையில், அன்றிரவும் தனக்கு அம்மா வேண்டும் என கூறி குறித்த சிறுவன் விடிய விடிய அழுது புலம்பியுள்ளான்.
சிறுவனை சமாதானப்படுத்த பொலிஸார் எடுத்த முயற்சிகள் வீணாகிய நிலையில், மறுநாள் இச்சிறுவனின் தாயை வரவழைத்தனர்.
23 வயதான சிறுவனின் தாய் சீதுவ பிரதேசத்திலுள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், தனது மகனான இச்சிறுவனை நாள் பராமரிப்பு நிலையத்தில் விட்டு செல்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் துறவியாக்க பௌத்த பிக்கு சிறுவன் ஒருவனை தேடியதை அறிந்து தனது மகனை அந்த பிக்குவிடம் சென்று இவ்விகாரையில் ஒப்படைத்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
விகாராதிபதியின் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்ட பொலிஸார், கெச்பேவை நீதிமன்றத்தில் சிறுவனை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
More Tamil News
- இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை
- நல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி
- அரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- கிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி
- வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
- திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
- பாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்
- யாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை
- தமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Four year old boy Occurred Feisty