நாட்டை பெருமை அடையச் செய்து விட்டீர்கள் : சிவப்பு கம்பள வரவேற்பில் தனுஷ்..!

0
670
Dhanush walks red carpet Cannes 2018,Dhanush walks red carpet Cannes,Dhanush walks red carpet,Dhanush walks red,Dhanush walks

(Dhanush walks red carpet Cannes 2018)

புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார்.

நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், “தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆஃப் பகிர்” என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இப் படம் பிரஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. படத்தில் மந்திரவாதியாக நடித்துள்ள தனுஷ் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ், ”தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆஃப் பகிர்” படத்தின் இயக்குநர் கென் ஸ்காட்டுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் அந்த புகைப்படத்துக்கு கீழ் அவர் பதிவிட்டிருந்ததாவது.. :-

”சர்வதேச திரைப்பட விழவான கேன்ஸ் 2018ல் ‘தி எக்ஸ்டிரார்டினர் ஜர்னி ஆஃப் பாகிர்’ படத்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. விரைவில் பாரிஸில் உங்களை சந்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, இப் படத்தை ரசிகர்கள் பலர் ஷேர் செய்து, தனுஷுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்தப் புகைப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன் , ”நாட்டை பெருமை அடையச் செய்து விட்டீர்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Dhanush walks red carpet Cannes 2018

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

அனுருத்த பொல்கம்பல கைது