அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஆப்பிரிக்கர்கள்

0
344
African Athletes Australia

African Athletes Australia

கொமன்வெல்த் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்து மாயமான ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்களுக்கு ஏற்கனவே ‘Bridging’ விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் 19 பேர் வரை அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 11 வீரர்கள் குழுவொன்றே , தமது சொந்த நாடுகளுக்கு திரும்பவில்லையென தெரிவிக்கப்பட்டது. கெமரூனைச் சேர்ந்த 5 குத்துச் சண்டை வீரர்கள், 3 மல்யுத்த வீரர்கள், உகாண்டாவைச் சேர்ந்த இரு வீரர்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் ஒருவரும் இவ்வாறு நாடு திரும்பவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் மொத்தம் 19 பேர் வரை நாடு திரும்பியிருக்கவில்லை என அகதிகள் தொடர்பான அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இதில் பலருக்கு ஏற்கனவே விசாக்கள் வழங்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.