பிரான்ஸில், உயிரைக் காப்பாற்றிய 5 வயதான சிறுவன்!

0
521
france5 year old son call 17 police- save father's life

5 வயதான மகன் தனது தந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட உடன், காவற்துறையினரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தனது தந்தையை காப்பாற்றியுள்ளார். 5 year old son call 17 police- save father’s life

தந்தை மயங்கியதை அவதானித்த குறித்த 5 வயது சிறுவன் 17 எனும் ஜோந்தாமினரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு காவற்துறையினருக்கு அழைப்பை ஏற்படுத்தி ‘மாலை வணக்கம். நான் நினைக்கின்றேன் என்னுடைய தந்தையார் இறந்துவிட்டார்!’ என தெரிவித்துள்ளான்.

இச் சம்பவம் Orne இல் உள்ள Glos-la-Ferrière எனும் ஒரு சிறிய குக்கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. Quentin எனும் பெயருடைய ஐந்து வயது சிறுவனே ஜோந்தாம் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளான்.

அவன் வாயில் நுரை தள்ளிய நிலையில், கட்டிலில் படுத்திருக்கிறார் என மிகத் தெளிவாக தகவலை தெரிவித்ததோடு, வீட்டு முகவரியையும் தெரிவித்துள்ளான். இதனால 44 வயதுடைய அவனது தந்தை ஜோந்தாம் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சிறுவனின் இந்த நடவடிக்கை Orne மாவட்ட ஜோந்தாம் உயர் அதிகாரியால் பாராட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**