(Vijay TV Program BIGG BOSS Season Two Contestant Abarnathi)
தமிழ் நாடு மக்கள் மட்டுமன்றி உலகத்தில் வாழும் கோடான கோடி ரசிகர்கள் ரசித்த நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி அனைத்து தமிழ் ரசிகர்களாலும் வரவேற்கப்பட்ட ஒரு நிகழ்ச்ச்சியாக மாறியது.
இறுதிப்போட்டி நிறைவடைந்ததும் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த சீசன்-2 வருகின்ற ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
விஜய் டிவி இதற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் செட் அமைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது அனைவரது கேள்வியும் யார் யார் போட்டியாளர்களாக பிக்-பாஸ் வீட்டுக்குள் நுழையவிருக்கிறார்கள் என்பதேயாகும்.
முதல் சீசனில் போட்டியில் கலந்து கொண்ட ஓவியா ஜூலியை யாரும் மறந்துவிடமாட்டார்கள். ஓவியா தனது நல்ல குணங்களால் அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தார். ஆனால் ஜூலி தன் நரிக்குணத்தால் அனைவரிடமும் மாட்டிக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க, இம்முறை ஓவியாக்கு பதிலாக யார் களமிறங்கவுள்ளனர் ஜூலிக்கு இணையாக யார் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையவுள்ளனர் என்பதேயாகும்.
இதற்கிடையில் இன்னோர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீடு மாப்பிளை நிகழ்ச்சியும் செம ஹிட். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபர்ணதியை தமிழ் நாட்டு மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
எல்லோரிடமும் நற்பெயர் வாங்கிய அபர்ணதி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய மாட்டாரா? என்று அபர்ணதி ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். அப்படி அவரும் வந்துவிட்டால் இரண்டாவது சீஸனின் ஓவியா இவராகத்தான் இருக்கும். பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
Tag: Vijay TV Program BIGG BOSS Season Two Contestant Abarnathi