இன்றைய ராசி பலன் 15-05-2018

0
344
Today horoscope 15-05-2018

மேஷ ராசி நேயர்களே !
முக்கிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே !
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம் ராசி நேயர்களே !
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அஞ்சல்வழித் தகவல் அனுகூலம் தரும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன்தரும்.

கடக ராசி நேயர்களே !
நிதி நிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கனவு பலிதம் உண்டு. கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழி சலுகை கிட்டும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கன்னி ராசி நேயர்களே !
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிட்டும். உடல்நலம் சீராகும்.

துலாம் ராசி நேயர்களே !
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. இனம்புரியாத கவலைகள் மாற இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
யோகமான நாள். கூட்டு முயற்சிகளில் லாபம் உண்டு. பெண்வழி பிரச்சினைகள் தீரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் பங்குதாரர்கள் லாபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

தனுசு ராசி நேயர்களே !
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.

மகர ராசி நேயர்களே !
வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும்.திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். அன்னிய தேச தொடர்பால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம் ராசி நேயர்களே !
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வரவு திருப்தி தரும்.

மேலும் பல சோதிட தகவல்கள்