தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை – நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு

0
547
tamilnews mullivaaikkal memorable thamilzaraichi summit killing

(tamilnews mullivaaikkal memorable thamilzaraichi summit killing)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான இன்று யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதேவேளை, நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று (15) அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது.

படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுக பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , விந்தன் கனகரட்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

 

(tamilnews mullivaaikkal memorable thamilzaraichi summit killing)

More Tamil News

Tamil News Group websites :