பிரேத பரிசோதனையின்றி அடக்கம் செய்ய முயற்சி – குழந்தையின் மரணத்தில் மர்மம்

0
590
tamilnews complaint mysteriously lost child found buried untimely

(tamilnews complaint mysteriously lost child found buried untimely)

மாளிகாவத்தை அடுக்குமாடி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனையின்றி புதைக்க முற்ப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (14) மாலை 05.00 மணியளவில் கொழும்பு 10, ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குழந்தையொன்று மரணமடைந்ததாக மாளிகாவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனை செய்த போது 02 வயதுடைய மொஹமட் அலி மொஹமட் உஸ்மான் இகம் என்ற குழந்தை உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

குழந்தையின் உடம்பில் சீனியின் அளவு அதிகரித்ததால் அது உயிரிழந்ததாக விசாரணையின் போது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் இடது காலில் தீக்காயங்கள் இருந்ததை அவதானித்துள்ளனர்.

இந்தநிலையில் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

பின்னர் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இடம்பெற உள்ள நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(tamilnews complaint mysteriously lost child found buried untimely)

More Tamil News

Tamil News Group websites :