பஸ்ஸர பகுதியில் மண்சரிவு அபாயம் – சரியும் நிலையில் பாரிய கருங்கல்

0
128
tamilnews badulla passara rock landslide heavyrain awareness

(tamilnews badulla passara rock landslide heavyrain awareness)

பஸ்ஸர, கனவரெல்ல பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் உள்ள மண்மேடு சரியும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவினால் விசாலமான கருங்கல் ஒன்றும் சரிந்து கொண்டு இருப்பதாக தமிழ்நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (15) காலை முதல் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்தை அபாயமுள்ள பகுதியிலிருந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனைய 14 குடும்பங்களையும் அங்கிருந்து அகற்றுவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம் உதயகுமார தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிக்கு கடந்த 24 மணித்தியாளங்களாக 125 மில்லி மீற்றர் மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(tamilnews badulla passara rock landslide heavyrain awareness)

More Tamil News

Tamil News Group websites :