காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே!

0
807
Sri Lanka Last War Missing Persons Jasmin zooka Discussion

(Sri Lanka Last War Missing Persons Jasmin zooka Discussion)

வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் தாமாகவே தமது உறவினர்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள்.

இவர்கள் அனைவரையும் பொறுப்பெடுத்து கொண்ட இலங்கை இராணுவம் அதன் பின்னரான காலப்பகுதியில் இவர்களுக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்னும் போக்கில் இவர்களை காணாமல் போனவர்கள் என்னும் வகைக்குள் அடக்கிவிட்டுள்ளது.

தமது கண்ணின் முன் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகளும் உறவினர்களும் காணாமல் போனவர்கள் என்னும் வகைக்குள் அடக்கபட்ட சோகத்தை தாங்க முடியாத எமது உறவுகள் , இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்ப்பதாக ஒரு முக்கிய விடயம் இடம்பெறவுள்ளமை மிகவும் வரவேற்கதக்கது.

ஆம்! இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள 280 பேரின் விபரங்களை எதிர்வரும் மே 18 அன்று வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார்.

இவர் உறுதியளித்தபடி காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் வெளியிடப்படும் நிலையில் அது பல முக்கிய திருப்பங்களை கொண்டுவரும். இந்த அழுத்தத்தில் இலங்கை அரசு அவர்கள் பற்றிய விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்ற கூடிய சந்தர்ப்பம் உருவாகலாம்.

எனவே மே 18 இல் எமது உறவுகளுக்கு வலு சேர்க்க அனைவரும் இந்த விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஒன்று சேர்வோம்.

Photo Source : dailytimes.com.pk

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு