தடை செய்யப்பட்ட மருந்துப் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை!!

0
222
Singapore tablets using warning

(Singapore tablets using warning)

சிங்கப்பூர் , சுகாதார அறிவியல்  ஆணையம், Ausbee Australia® Ausbee மூலிகை மாத்திரைகள், Shen Loon She™ Edoly மாத்திரைகள்  ஆகியவற்றை  உட்கொள்ள  வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட பல மருந்துப் பொருட்கள் அவற்றில் காணப்பட்டதாய் ஆணையம் தெரிவித்துள்ளது,. ibuprofen, dexamethasone,chlorpheniramine போன்றவை அவற்றில் அடங்கும்.

ஊக்கமருந்துகளைக் கொண்ட இந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டிருந்தால், விரைவில் மருத்துவரை நாடுமாறு பொதுமக்களை ஆணையம் கேட்டுக்கொண்டது.

மேலும் , மருத்துவரின் மேற்பார்வையின்றி அம்மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், களைப்பு, குழப்பம், குறைந்த இரத்த-அழுத்தம் உள்ளிட்ட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

அதோடு , குறிப்பாக அந்த மருந்துகளை சில வாரங்களுக்கு மேல் உட்கொண்டிருந்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.

tags:-Singapore tablets using warning

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**