கட்டுமான கட்டிடத்திற்க்கான புதிய பாதுகாப்பு சோதனைகள் அறிமுகம்!

0
454
Singapore construction building security check introduce

(Singapore construction building security check introduce)

சிங்கப்பூர்,  கட்டுமானத்  துறையில்  வேலையிடப்  பாதுகாப்புச்  சோதனைகளை  அதிகமாக்க மனிதவள அமைச்சு முடிவெடுத்துள்ளது.

கட்டுமானத் துறையில்,  விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களும்  கடுமையான காயங்களும் அதிகரித்துள்ளதே  இதற்கு  காரணம்,   அதோடு  இந்த  ஆண்டில் இதுவரை வேலையிட விபத்துகளில்  மரணமடைந்த 11 ஊழியர்களில், 6 பேர் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மற்றும் , உயரமான இடங்களில் வேலை செய்வோர், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே விபத்துகளுக்கு முக்கியக் காரணமெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று கட்டுமானத் தளம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது, மனிதவளத் துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) உடனிருந்தார் எனவே , அடுத்த மூன்று மாதங்களில் வேலையிடப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

tags:-Singapore construction building security check introduce

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**