மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

0
839
Prabhakaran Malaysian record book, malaysia tamil news, malaysia news, malaysia, Prabhakaran,

{ Prabhakaran Malaysian record book }

மலேசியாவின் சாதனை புத்தகத்தில் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் பெயர் இடம்பெற்றுள்ளது. இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர் என்ற சாதனையை அவர் புரிந்ததாகக் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபாகரன் சாவி சின்னத்தில் போட்டியிட்டார். முன்னதாக பத்து தொகுதி வேட்புமனு தாக்கலின் போது பிகேஆரின் வேட்பாளர் தியான் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் பிகேஆர் பிரபாகரனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பத்து தொகுதியில் 24438 வாக்குகள் பெரும்பான்மையில் பிரபாகரன் வெற்றி பெற்றார். குறிப்பாக தேசிய முன்னணியின் வேட்பாளரும் கெராக்கான் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ டோமினிக் லாவ்வையும் அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 வயது 3 மாதங்களே ஆகிய பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

1976ஆம் ஆண்டு துன் ரசாக் காலமான போது, பகாங் பெகான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நஜீப் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை பிரபாகரன் முறியடித்துள்ளார்.

மலேசிய சாதனை புத்தகத்தில் பிரபாகரன் இடம் பெற்றதற்கான தகவல் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிரபாகரனிடம் அந்த சான்றிதழ் மிக விரைவில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Prabhakaran Malaysian record book

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

<<Tamil News Groups Websites>>