வடக்கு பொலிஸாரின் விடுமுறைகள் இன்று தொடக்­கம் இரத்து : பாதுகாப்பு அதிகரிப்பு

0
772
North police officers leaves canceled

(North police officers leaves canceled)
வடக்கு மாகா­ணத்­தில் கட­மை­யாற்­றும் பொலி­ஸா­ரின் விடு­மு­றை­கள் இன்று தொடக்­கம் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை­யில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதேவேளை வடக்கில் வழமைக்கு மாறாக பாதுகாப்பு நடவடிக்கைள் அதிரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னாண்­டோ­வின் உத்­த­ர­வுக்கு அமை­வா­கவே விடு­மு­றை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

என்ன கார­ணத்­துக்­காக விடு­மு­றை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன என்­பது தொடர்­பில் தெரி­ய­வ­ர­வில்லை.

இதே­வேளை, வடக்கு மாகாண பொலி­ஸா­ரின் விளை­யாட்­டுப் போட்­டி­கள் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி இடம்­பெ­ற­வி­ருந்த நிலை­யில், அது தற்­போது நாளை மறு­தி­னம் 17ஆம் திக­தி­யும், 19ஆம் திக­திக்­கும் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :