முள்ளிவாய்க்கால் நிகழ்வு; தமிழர் தாயகத்தில் பொலிஸ் பாதுகாப்பு

0
398
Mullivaikal remember day Tamil homeland Strengthening security police

(Mullivaikal remember day Tamil homeland Strengthening security police)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல தரநிலை பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இன்று நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இன்று காலை அறிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மே 18 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுன்கிறது.

இந்த நிகழ்வுகளை முன்னிட்டு குழப்ப நிலைகளைத் தடுக்க பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கொழும்பில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாகாணத்தின் சகல பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புகள் இன்று 15 ஆம் திகதி தொடக்கம் வரும் 20 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mullivaikal remember day Tamil homeland Strengthening security police