பல நாள் திருடன் 61 ஆடுகளுடன் சிக்கினான் : இலஞ்சம் வழங்கி தப்பிக்கவும் முயற்சி

0
536
man arrested abducted 61 goats

(man arrested abducted 61 goats)
கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்ற நபர் ஒருவர், வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று அதிகாலை 61 ஆடுகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியிலிருந்து எவ்வித ஆவணங்களும் அற்ற நிலையில் அளவிற்கு அதிகமாக 61 ஆடுகளை, மீன்கள் எடுத்துச் செல்லப்படும் கூலர் ரக வாகனத்தில் கடத்திச் சென்ற போது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஆடுகளுடன் குறித்த வாகனச் சாரதியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆடுகளையும் தன்னையும் விடுதலைசெய்யுமாறு குறித்த சாரதி தமக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை பல நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :