செயலாளர் பதவியை இராஜினமா செய்யவுள்ளார் மஹிந்த அமரவீர

0
952
Mahinda Amaraweera Secretary post Resignation

(Mahinda Amaraweera Secretary post Resignation)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர முன்னணியின் செயலாளர் பதவியை இராஜினமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செயலாளர் நாயகத்திடம் வினவிய போது, தான் எந்தநேரமும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை துறப்பதற்கு தயாராக உள்ளதாகவும், இதனைப்பற்றி கூட்டணியின் தலைவரிடம் பலமுறை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டியவர் கட்சியை நேசிக்கும் மற்றும் கட்சியை விட்டு என்றும் விலகாத ஒருவராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அல்லது தாமரை மொட்டு கட்சி உறுப்பினராக இருக்கக்கூடாது எனக் கூறிய அவர், கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு தான் எப்போதும் ஆதரவு வழங்குவதாகவும், ஒருபோதும் தான் கட்சியை விட்டு விலக போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

என்றாலும், ஊடகத் தகவல்களின்படி கூட்டணியின் செயலாளர் தனது பதவியை விட்டு விலகுவதாக கட்சியின் தலைமைத்துவத்திற்கு தெரிவித்த போதெல்லாம் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்ப்பாக உங்களுக்கு எவரிடமிருந்தும் எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை எனவே அத்தகைய முடிவுகளை எடுப்பதில் தவிர்க்கவும் என்றும் ஜனாதிபதி மஹிந்த அமரவீரவுக்கு தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mahinda Amaraweera Secretary post Resignation