IS தாக்குதலுக்கு துணை போனவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது!

0
597
ISIS Paris attack knife man's friend arrest

பரிஸில், கடந்த சனிக்கிழமை (மே 12) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பயங்கரவாதியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், மே 13 மாலை பயங்கரவாதியின் நண்பன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். ISIS Paris attack knife man’s friend arrest

குறித்த பயங்கரவாதியின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், அவனது பெற்றோர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பாக, மே 13 (ஞாயிற்றுக்கிழமை) மாலை Strasbourg இல் வைத்து பயங்கரவாதியின் நண்பன் ஒருவனையும் கைது செய்துள்ளனர். ஆனால், பயங்கரவாத தாக்குதலில் குறித்த நபருக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று (மே 14) Levallois-Perret இலுள்ள DGSI தலைமை அலுவலகத்துக்கு குறித்த பயங்கரவாதியின் நண்பன் மாற்றப்பட்டுள்ளான்.

மேலும், இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, குறித்த பயங்கரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான். அத்துடன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நால்வரும் ஆபத்து நிலையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**