மீனவர்களுக்கு நற்செய்தி; அமைச்சரவையில் முடிவு

0
603
Even fuels cost increased Ceylon petrolatum Corporation continues losses

(Good News Fishermen Cabinet decided)
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் வழங்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிணைப்பு மோட்டார் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 35 கோடி ரூபா செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், பைபர் கிளாஸ் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க 337 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 115 கோடி ரூபா செலவு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Good News Fishermen Cabinet decided