பிரான்ஸில் பல்கலைக்கழக இறுதி தவணைப் பரீட்சைகள் ரத்து!

0
197
France student protest cancel term exams

ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றைய தினம் (மே 14) இரண்டு பல்கலைக் கழகங்களுக்குள் மாணவர்கள் செல்வதை தடை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு மாணவர்கள் தங்கள் இறுதி தவணைப் பரீட்சைகளை ரத்து செய்துள்ளனர். France student protest cancel term exams

பிரெஞ்சு அரசாங்கம் அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வுகளுக்கான கடினமான நடைமுறைகளை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை பல மாதங்களாக நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.

தென்கிழக்கு நகரமான லியோனில் உள்ள லியோன் 2 பல்கலைக் கழகத்தின் இரண்டு தளங்களில் சுமார் 300 ஆர்ப்பாட்டக்காரர்கள் மனித சங்கிலியை உருவாக்கி போராட்டம் நடத்தியதனாலேயே இவ்வாறு மாணவர்களின் பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையில், மார்ஸ்லே காவற்துறையினர் Aix-Marseille பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுத்து நிறுத்துவதில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**