மீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை

0
721
Fishermen warning Talks today Fisheries Minister

(Fishermen warning Talks today Fisheries Minister)
நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தாங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தங்களுக்கு நீதியான தீர்வு கிடைக்காவிட்டால் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மீனவர் சங்கங்களில் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிலாபம், வென்னப்புவ, கற்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச மீனவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக கடலுக்கு செல்வதை நேற்றைய தினம் தவிர்த்துள்ளனர்.

சிலாபம் மீன் விற்பனை நிலையமும், மீன் வள துறைமுகமும் மக்களின் நடமாட்டமின்றி காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் நோக்கத்துடன் மீன் வளத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் கருப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று கடற்தொழில் அமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்தையில் சாதகமான முடிவு கிடைக்காவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தளம் மாவட்டத்திலுள்ள பல்வேறு மீன்பிடி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 80 க்கு அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Fishermen warning Talks today Fisheries Minister