கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்

0
628
Incident rape businessman liquor business indiatamilnews

(Co Actress gang raping chennai latest )

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் ஒருவரை கத்தி முனையில் கற்பழித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது .

சென்னை போரூர் அருகே வசித்து வரும் பெண் சில படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் .

இந்நிலையில் பட வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளனர் .

குமார் என்ற நபர் பெண்ணை தொடர்பு கொண்டு தான் ஒரு படம் எடுக்க உள்ளதாகவும் அதில் கதாநாயகியாக அந்த பெண்ணை நடிக்க வைப்பதாகவும் , தற்பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளர் சென்னை வந்துள்ளதாகவும்  நீங்கள் வந்தால் அவரை சந்தித்து பேசலாம் .நீங்கள் போரூர் சிக்னல் அருகே வந்தால் காரில் கூட்டி கொண்டு செல்வோம் என கூறியுள்ளனர் .

எனவே, அன்று இரவு அந்த பெண்ணும் அந்த இடத்திற்கு வர, காரில் அவரை குமார் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். காருக்கு பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர். குன்றத்தூருக்கு அருகில் உள்ள தரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.

வீட்டிற்குள் சென்றதும் கத்தி முனையில் அவரை மிரட்டி 3 பேரும் கற்பழித்துள்ளனர். அப்போது வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும், அவரிடமிருந்த செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு, இதை வெளியே கூறினால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம், மேலும், உன்னை கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

ஆனாலும் அப்பெண் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, அவரது செல்போனுக்கு வந்த எண், அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Co Actress gang raping chennai latest