ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ள சீனா

0
203
Cheng Xueyuan china plan give one billion us dollars

(Cheng Xueyuan china plan give one billion us dollars)
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கவுள்ளது.

மத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்காகவே ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

அலரிமாளிகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவருக்குமிடையிலான ஊhநபெ ஓரநலரயn சந்திப்பின் போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்த நிதி சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர் இதனை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் போன்றவை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை திட்டத்தில் முதலீடு செய்ய வரும் சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்கப் போவதாக தூதுவர் குறிப்பிட்டார். சீன நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் நீர்விநியோகத் திட்டம் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கையை சீனா கடன்வலையில் வீழ்த்தி இருப்பதாக, அமெரிக்காவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :