டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!

0
1096
Actress Kristen Stewart remove shoe Cannes Film festival

பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைபட விழா நடைபெறும். அந்த வகையில், தற்போது 71 ஆவது 2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. மே 8 ம் திகதி தொடங்கிய கேன்ஸ், மே 19 ம் திகதி வரை இடம்பெறும்.Actress Kristen Stewart remove shoe Cannes Film festival
இவ் விழாவிற்கு, இந்தியாவில் இருந்து தீபிகா படுகோனே, சோனம் கபூர், கங்கணா ரனாவத், ஐஸ்வர்யா ராய், தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கேன்ஸ் விழாவில் ரெட் கார்பெட் அங்கீகாரம் எளிதில் எல்லோருக்கும் கிடைக்க கூடிய ஒன்றல்ல.

திறமை, அழகு, ரசிகர்களின் வரவேற்பு என பல விஷயங்களை கொண்டது கேன்ஸ் ரெட் கார்பெட். ரெட் கார்பெட்டில் கலந்து கொள்ளும் நடிகைகள் பலர் தங்களை சிறப்பாக முன்நிறுத்த முற்படுவது வழக்கம்.

ரெட் கார்பெட்டில் நடிகைகளின் உடை மற்றும் தோற்றம் ஹைலைட் ஆவது வழக்கம். ஆனால் இந்த வருடம், நடிகை ஒருவர் ரெட் கார்பெட்டில் ஷூவை கழட்டியது ஹைலைட் ஆகியுள்ளது.

Actress Kristen Stewart remove shoe Cannes Film festivalஅதாவது விழாவின் போது டுவிலைட் படத்தின் நாயகி கிரிஸ்டென் ஸ்டீவர்ட், ரெட் கார்பெட்டில் சூவை கழட்டியது தற்போது வைரலாகி வருகிறது.

கிரிஸ்டென் ரெட் கார்பெட்டில் வந்தபோது மழை பெய்ததால், ஷூவுடன் வேகமாக நடக்க சிரமமாக இருந்ததனால் அதனை கழட்டி விட்டு நடந்து சென்றுள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**