{ Young MP joined PKR party Prabhakaran }
மலேசியா: பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு, பின்னர் பக்காத்தான் ஹராப்பானின் முழுமையான ஆதரவுடன் வெற்றி பெற்ற 22 வயதுடைய சட்டத்துறை மாணவரான பி.பிரபாகரன் நேற்று அதிகாரப்பூர்வமாக பிகேஆர் கட்சியில் சேர்ந்துள்ளார்.
இந்தத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளம் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரபாகரன், பிகேஆர் கட்சியில் சேர்ந்ததை தாங்கள் விரைவில் கொண்டாடவிருப்பதாக தியான் சுவா கூறியுள்ளார்.
பத்து தொகுதியில் பாரிசான், பாஸ் மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 4 முனைப் போட்டியில் பிரபாகரன் 24,438 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் எனபது குறிப்பிடத்தக்கது.
Tags: Young MP joined PKR party Prabhakaran
<< RELATED MALAYSIA NEWS>>
*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!
*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!
*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!
*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!
*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!
*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!
*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!
*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!
<<Tamil News Groups Websites>>