இன்றைய ராசி பலன் 14-05-2018

0
678

(Today horoscope 14-05-2018)

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 31ம் தேதி, ஷாபான் 27ம் தேதி,
14.5.18 திங்கட்கிழமை. தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:32 வரை;
அதன் பின் அமாவாசை திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:57 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை.

மேஷ ராசி நேயர்களே !
முக்கிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது

ரிஷப ராசி நேயர்களே !
பேச்சு, செயலில் நேர்மையைப் பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் விற்பனை உயர்வால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவர்.

மிதுனம் ராசி நேயர்களே !
சிலர் உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை மீறி நடப்பர். பொறுமை காப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சிபெற விடாமுயற்சி தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். பயணத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.

கடக ராசி நேயர்களே !
கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை பெற யோகம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே !
யாருக்கும் தகுதி மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு கடன் பெற நேரிடலாம். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கன்னி ராசி நேயர்களே !
குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்களுக்கு விருந்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வரும்

துலாம் ராசி நேயர்களே !
பெருந்தன்மையுடன் எதிரியையும் மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
சொந்தப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற்ற தாமதமாகும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். உடல்நிலை திருப்தியளிக்கும்.

தனுசு ராசி நேயர்களே !
சிறிய முயற்சியும் அதிக நன்மை தரும். விலகிச் சென்ற உறவினரும் அன்புடன் நெருங்குவர். தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு தேவை தாராள செலவில் நிறைவேறும். சுபவிஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்

மகர ராசி நேயர்களே !
சுயகவுரவம் நிலைநாட்டுவதில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வருமானம் சீராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம் ராசி நேயர்களே !
நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். பெறறோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மீனம் ராசி நேயர்களே !
வழக்கத்திற்கு மாறான திடீர் பணி குறுக்கிடலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர்.

keyword:Today horoscope 14-05-2018

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்