அமைச்சருக்கு எதிராக செயற்பட்ட முதலமைச்சர் அதிகாரிகளையும் கண்டிக்க வேண்டும்

0
265
tamilnews north provinc cm take action bribery officers kandeeban

(tamilnews north provinc cm take action bribery officers kandeeban)

ஊழல் செய்ததாக கூறி அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் வட மாகாணத்தில் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கமற்ற வினைத்திறனற்ற அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் த. காண்டீபன் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலதிக நேர கொடுப்பனவை உரிய நேரத்தில் வழங்ககோரி மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பாக இன்று யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் காண்டீபன் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது, மேலும் அவர் கூறுகையில், பொது மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.

நாம் எமக்கு கிடைக்கவேண்டிய மேலதிக நேர கொடுப்பனவு கிடைக்காமையினையும், அந்த மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்காமல் இழுத்தடிக்கும் அரச அதிகாரிகளை கண்டித்துமே இந்த பணி பகிஷ்கரிப்பை நடத்துகிறோம்.

வைத்தியர்கள் தமது சேவை நேரத்திற்கு மேலதிகமாக எவ்வளவு நேரம் சேவை செய்தாலும் வெறும் 4 மணித்தியாலங்களுக்கான கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுவது வழமை.

அதனை வழங்குவதற்கு வடமாகாண சபை அதிகாரிகள் சிலர் தடங்கலாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருடன் பேசியபோது 10 ம் திகதிக்கு முன்னதாக எமக்கு கிடைக்கவேண்டிய மேலதிக நேர கொடுப்பனவை வழங்குவதாக கூறியிருந்தார்கள்.

ஆனால், இதுவரை வழங்கப்படாத நிலையில் நாங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றோம்.

நீங்கள் போராடுங்கள் போராடினால்தான் மத்திய அரசாங்கம் நிதியை தரும் என எங்களுக்கு கூறப்படுகின்றது.

நாங்கள் போரடிதான் பெறவேண்டும் என்றால் மாகாண சுகாதார அமைச்சு எதற்காக? இலங்கையில் மற்றைய மாகாணங்களில் வைத்தியர்களுக்கு மேலதிக
நேர கொடுப்பனவு உரிய காலத்தில் வழங்கப்படுகிறது.

வடமாகாணத்தில் மட்டும் சில அதிகாரிகளின் செயற்பாட்டினால் அது பின்னடிக்கப்படுகிறது.

ஆகவே, இந்த அதிகாரிகள் மீது முதல மைச்சர் விசாரணை நடத்தவேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து மக்களை அடக்கி ஆழ்வதே வடமாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளின் பிரதான செயற்பாடாக இருக்கின்றது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் இவ்வாறான மக்களுக்கு சேவை செய்யாத அசமந்தபோக்குள்ள அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

(tamilnews north provinc cm take action bribery officers kandeeban)

More Tamil News

Tamil News Group websites :