பெங்களூர் அணியின் வெற்றிக்கான வழி இதுதான் : கூறுகிறார் கோஹ்லி!

0
255
royal challengers bangalore team winning strategies

(royal challengers bangalore team winning strategies)

ஐ.பி.எல். தொடரில் இம்முறை பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

பெங்களூர் அணியின் பந்து வீச்சு அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணடாக அமைந்திருந்தது.

எனினும் இறுதியாக நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான போட்டியில் 182 என்ற வெற்றியிலக்கினை 19 ஓவர்களில் எட்டி வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றி பெங்களூர் அணிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய கோஹ்லி 40 பந்துகளுக்கு 70 ஓட்டங்களையும், டி வில்லியர்ஸ் 17 பந்துகளுக்கு 72 ஓட்டங்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்நிலையில் அணியின் வெற்றி குறித்தும் ஏனைய போட்டிகள் குறித்தும் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில்,

“ இந்த தொடரை பொருத்தவரையில் நாம் அணியின் பந்து வீச்சு எமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தாலும், பந்து வீச்சில் மோசமாக செயற்பட்டு தோல்வியடைந்தோம்.

எனினும் இறுதியாக நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிபற்றோம். பந்து வீச்சு சிறப்பாக இல்லாவிட்டாலும், ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுவது அணிக்கு இலகுவாக இருந்தது. தொடரின் இந்த கட்டத்தில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதே அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>