2.4 மில்லியன் பெறுமதியான தங்கப் பாலங்களுடன் சந்தேகநபர் கைது

0
536
person attempting smuggle gold biscuits Bandaranaike International Airport

(person attempting smuggle gold biscuits Bandaranaike International Airport)

சுமார் 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கப் பாலங்களை பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கடத்த முனைந்த சந்தேக நபரொருவரை இன்று (14) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று முற்பகல் 11.50 மணியளவில் சென்னையிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் பெறுமதியான 4 தங்ககட்டிகளை மீட்டுள்ளதாக சுங்கத்துறையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(person attempting smuggle gold biscuits Bandaranaike International Airport)

More Tamil News

Tamil News Group websites :